»   »  ஆந்திர, தெலுங்கானா மக்களே முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள்... நம்ம சென்னைக்காக - சமந்தா

ஆந்திர, தெலுங்கானா மக்களே முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள்... நம்ம சென்னைக்காக - சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: "ஆந்திர, தெலுங்கானா மக்களே உங்களால் முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக" என்று நடிகை சமந்தா தெலுங்கு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னை மற்றும் கடலூர் மக்களை மிகவும் வாட்டி வதைத்த கன மழையால் மக்களின் வாழ்வாதரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

Please Donate as Much as Possible Samantha Request

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் ஒன்றிணைந்து மக்களிடம் பொருட்களைத் திரட்டி பெரிய டிரக்குகள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்தப் பணியில் நடிகை சமந்தாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'மனமெட்ராஸ் கொசம்' என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நடிக, நடிகையர் திரட்டி வருகின்றனர்.

மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை ராமநாயுடு ஸ்டுடியோவில் வந்து அளிக்குமாறு நடிகர்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா "ஆந்திர, தெலுங்கானா மக்களே! உங்களிடம் உண்மையாக வேண்டிக் கொள்கிறேன். உங்களால் எவ்வளவு உதவிகளை வழங்க முடியுமோ அவ்வளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக"

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சமந்தாவின் சொந்த ஊர் சென்னை பல்லாவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai Rain: Samantha Ruth Prabhu Wrote on Twitter "Sincerely request you guys to please donate as much as possible. #ManaMadrasKosam".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil