»   »  பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,மற்றவர்களையும் வளர விடுங்க, ஏறி மிதிக்காதீங்க..வலிக்குது: சாந்தனு

பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,மற்றவர்களையும் வளர விடுங்க, ஏறி மிதிக்காதீங்க..வலிக்குது: சாந்தனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,வேண்டாம்னு சொல்லல!ஆனா மற்றவர்களையும் வளர விடுங்க என நடிகர் சாந்தனு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானவர் பாக்யராஜின் மகன் சாந்தனு. சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் நடித்தார்.

அந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடவில்லை. இந்நிலையில் தான் சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிப்பில் முப்பரிமாணம் படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ட்வீட்

பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,வேண்டாம்னு சொல்லல!ஆனா மற்றவர்களையும் வளர விடுங்க, ஏறி மிதிக்காதீங்க..வலிக்குது- புரியுறவங்களுக்கு புறியும்🙏🏻 என சாந்தனு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ப்ரோ

@imKBRshanthnu நீங்க இப்போதான் வளர்ந்து வரீங்க தமிழ் சினிமா பல நடிகர்களை பார்த்தாச்சு so இது மாதிரி பேசி உங்க வளர்ச்சியை கேடுத்துகாதிங்க ப்ரோ என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

தடைகள்

@imKBRshanthnuப கொஞ்சம் பெருசா வளரும் போது பல தடைகள் வர தான் செய்யும் அண்ணா தடைகளை தாண்டி வா எங்கள் தளபதி போல🖒🖒🖒🖒

கதை

@imKBRshanthnu #D16க்கு யாரும் தூக்கி விடல நல்ல படம் எடுத்தாங்க மேல வந்தாங்க. நிங்க ஏய மற்றவ குறை சொல்லுவதை விட்டு நல்ல கதை Choose பண்ணாலாமே

English summary
Actor Shanthanu tweeted asking people to let him also grow in the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil