»   »  ப்ளீஸ்... இதைக் கொஞ்சம் பாருங்க..! - ட்விட்டரில் கெஞ்சும் டி.டி

ப்ளீஸ்... இதைக் கொஞ்சம் பாருங்க..! - ட்விட்டரில் கெஞ்சும் டி.டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி எப்போதுமே ரசிகர்களின் ஃபேவரிட். பலர் இப்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தாலும் இவரின் இடத்தை யாராலும் பிடிக்கமுடியவில்லை என்பதே நிஜம்.

கலகல பேச்சாலும், குறும்புத்தனத்தாலும் திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவர் அதன்பிறகு வெகுசில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

ட்விட்டர் பிரபலம் :

ட்விட்டர் பிரபலம் :

இவர் சமூக வலைதளமான ட்விட்டரில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பார். அதேபோல், இவரது அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் போலவே ஒரு போலியான பக்கமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபேக் ஐடி குழப்பம் :

ஃபேக் ஐடி குழப்பத்தால் 'மெர்சல்' திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி வேறொரு டி.டி-யின் ட்வீட்களுக்கு லைக் செய்திருக்கிறாராம்.

எத்தனை தடவைதான் சொல்றது..? :

தன் பக்கத்தப் போலவே இருக்கும் போலியான பக்கம் குறித்து பல முறை டிடி ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் டிடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'நண்பர்களே என்னுடைய பக்கத்தில் ப்ளூ டிக் இருப்பதைப் பாருங்கள். என் பக்கத்தைப் போலவே இருக்கும் போலி அக்கவுண்ட்டுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

இதுக்கு அதுவே பரவாயில்ல :

அவரது இந்த ட்வீட்டிற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தந்தாலும், சிலர் செமையாகக் கலாய்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர், 'உங்களோட ட்வீட்டை விட ஃபேக் ஐ.டி-யில போடுற ட்வீட்டே சென்சிபிளா இருக்கு...' எனக் கூறியிருக்கிறார்.

ரிப்ளை வருது :

'அந்த அக்கவுண்ட்ல ரிப்ளையாச்சும் வருது. அதுனால எங்களுக்கு அதுவே போதும். அதையே ஃபாலோ பண்ணிக்கிறோம்' என வம்பிழுத்திருக்கிறார் இன்னொருவர்.

English summary
Anchor Divyadharshini facing fake ID issue in twitter. she says to her followers, 'Please don't fall for the fake id.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil