twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றியவர்.. சீதாராம சாஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    |

    டெல்லி: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் பாடலாசிரியரான சீதாராம சாஸ்திரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மூவாயிரம் திரை பாடல்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதிய பத்மஸ்ரீ விருது பெற்ற சீதாராம சாஸ்திரி இன்று மாலை 4 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

    அவரது மறைவு செய்தியால் டோலிவுட் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    அதிர்ச்சி.. 3000 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்அதிர்ச்சி.. 3000 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

    ராம்சரண் இரங்கல்

    ராம்சரண் இரங்கல்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வரும் ஜனவரி 7ம் தேதிக்கு வெளியாக உள்ள RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தோஸ்தி எனும் பாடலை பழம்பெரும் பாடலாசிரியரான சீதாராம சாஸ்திரி எழுதி உள்ளார். படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பாடலாசிரியர் காலமானதால் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ள ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பூஜா ஹெக்டே இரங்கல்

    பூஜா ஹெக்டே இரங்கல்

    அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அலாவைகுந்த புறமுலோ திரைப்படத்தில் தமன் இசையில் சித் ஸ்ரீராம் இசையில் இடம்பெற்ற சமஜவரகமானா பாடலை எழுதிய பாடலாசிரியர் மறைவுற்ற செய்தியை அறிந்த நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மனம் உடைந்த ராஜமெளலி

    மனம் உடைந்த ராஜமெளலி

    பிரபல பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரியின் மறைவால் மிகவும் மனம் உடைந்து போயுள்ள இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கில் மிக நீண்ட இரங்கல் கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி இரங்கல்

    பிரதமர் மோடி இரங்கல்

    குடியரசு தலைவர் கரங்களால் பத்மஸ்ரீ விருது பெற்ற புகைப்படத்தை ஷேர் செய்து பிரதமர் மோடி சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு தெலுங்கில் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் சிறிவெண்ணெல சீதாராம சாஸ்திரி என புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

    English summary
    Prime Minister Modi condoles legendary Telugu cinema lyricist Sirivennela Sitaramashastri’s demise and shares his Padma Shri award moment in his twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X