twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்று நாட்களில் ரூ.11 கோடி... 'பிஎம் நரேந்திர மோடி'யின் வசூல் நிலவரம்!

    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான பிஎம் நரேந்திர மோடி, மூன்று நாட்களில் ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது.

    |

    சென்னை: ரிலீசான மூன்று நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் நாடு முழுவதும் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஓமங் குமார். இந்த படத்தில் மோடியாக நடித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய்.

    PM Narendra Modi day 3 box office collection

    பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால், படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, மே 24ம் தேதி படம் திரைக்கு வந்தது.

    "கன்"ன்னைக் காட்டிய பங்கஜ்.. வீலென்று அலறிய ரிது சிங்.. ஷூட்டிங்கில் ஒரு திரில் சம்பவம்!

    ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்த மோடி, எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி காட்டுகிறது படம். நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்களை மட்டுமே படம் பேசுகிறது. அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.

    பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள், படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    PM Narendra Modi movie's weekend collection amounts to Rs 11.14 crore in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X