twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்!

    |

    சென்னை: மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் மகன் எழுதிய பொங்கல் கவிதைகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    கவிஞர் நா முத்துக்குமார் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர். இயக்குநராகும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவர். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

    தமிழ்த் திரைப்பட துறையில் 'வீர நடை' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான நா. முத்துக்குமார்,மின்சாரக் கண்ணா, ஹலோ,வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட 200 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

    கவிதை தொகுப்புகள்

    கவிதை தொகுப்புகள்

    சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியிருக்கிறார் நாமுத்துக்குமார்.

    இரண்டு தேசிய விருதுகள்

    இரண்டு தேசிய விருதுகள்

    தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காகவும் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு என்ற பாடலுக்குகாகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

    2016ல் மரணம்

    2016ல் மரணம்

    அது மட்டுமின்றி மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.

    மகனின் கவிதை

    மகனின் கவிதை

    அவருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
    இந்நிலையில் அவரது மகன் ஆதவன் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    என் யோசனை

    என் யோசனை


    போகி பண்டிகையை முன்னிட்டு ஆதவன் எழுதிய அந்த கவிதை இதோ..

    "நீ உன் ஆணவத்தை அன்பில் எறி
    இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி
    கோயிலில் இருக்கும் தேரு
    பானையை செய்யத் தேவை சேறு
    வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு
    இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு
    தமிழரின் பெருமை மண் வாசனை
    இந்த கவிதை என் யோசனை!"

    அன்பை சேரு

    அன்பை சேரு


    பொங்கல் திருநாளுக்காக கவிஞர் நா முத்துக்குமார் அவர்களின் மகன் ஆதவன் எழுதிய கவிதை,

    உழவர்களை அண்ணாந்து பாரு
    உலகத்தில் அன்பை சேரு
    அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு
    அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு
    உழவர்கள் நமது சொந்தம்
    இதை சொன்னது தமிழர் பந்தம்
    பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்
    இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு


    மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஆதவன் எழுதிய அந்த கவிதை தொகுப்பு,

    வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
    நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு
    கரும்பை இரண்டாக வெட்டு
    நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு
    சிப்பிக்குள் இருக்கும் முத்து
    மாடு தமிழர்களின் சொத்து
    மாடு எங்கள் சாமி
    நீ உன் அன்பை இங்கு காமி!

    நண்பர்களை சேரு

    நண்பர்களை சேரு


    காணும் பொங்கலுக்காக ஆதவன் எழுதிய கவிதை இதோ,

    உறவினர்கள் வந்தார்களா என்று பாரு
    உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு
    நீ அழகாகக் கோலம் போடு
    உன் நல்ல உள்ளத்தோடு
    நீ உனக்குள் கடவுளைத் தேடு
    இல்லையென்றால் நீ படுவாய் பாடு
    பெண்ணைக் கண்ணாகப் பாரு
    இல்லையென்றால் கிடைக்காது சோறு!
    இவ்வாறு முடிகிறது கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் எழுதிய அந்த கவிதை வரிகள்.

    ஆன்மா சந்தோஷப்படும்

    ஆன்மா சந்தோஷப்படும்

    சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த கவிதையை பார்தத நெட்டிசன்கள் நிச்சயம், அப்பா விட்டுச்சென்ற இடத்தை ஆதவன் நிரப்புவான் என வாழ்த்தி வருகின்றனர். மேலும், கவிஞர் முத்துக்குமாரின் ஆன்மா நிச்சயம் இந்த கவிதை வரிகளை பார்த்து சந்தோஷப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Poet Na Muthukumar's son Aadhavan has writen poem for pongal goes viral on social media. Na Muthukumar passes away on 2016 due to illness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X