twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலையின் நிழல் அழிந்துபட்டது: தீராக் கலைஞன் திலீப்குமாருக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி.. வைரமுத்து உருக்கம்

    |

    சென்னை: மறைந்த நடிகர் திலீப்குமாருக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார்.

    பாலிவுட்டின் பழம்பெரும் மூத்த நடிகர் திலீப்குமார். ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட் என அழைக்கப்பட்டு வந்தார்.

    கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு !கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு !

    கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

    மும்பை மருத்துவமனை

    மும்பை மருத்துவமனை

    இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார் திலீப்குமார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மோடி இரங்கல்

    மோடி இரங்கல்

    இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    ரசிகர்கள் இரங்கல்

    ரசிகர்கள் இரங்கல்

    இதேபோல் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளை சேர்ந்த பிரபலங்களும் நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ஒரு ரசிகனின் அஞ்சலி

    ஒரு ரசிகனின் அஞ்சலி

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து திலீப்குமாரின் மறைவுக்கு கவிதை வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    கலையின் நிழல்
    அழிந்துபட்டது

    எல்லோருக்குமான பிம்பம்
    உடைந்துவிட்டது

    ஒரு நூற்றாண்டின்
    கலைப் பிரதிநிதி
    காலமாகிவிட்டார்

    ஒரு வைரத்தைத்
    தொலைத்துவிட்டது
    இந்திய சினிமா

    தீராக் கலைஞன்
    திலீப்குமாருக்கு
    ஒரு ரசிகனின் அஞ்சலி.. இவ்வாறு கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து.

    English summary
    Poet Vairamuthu mourns for Dilipkumar. Dilipkumar passed away due to age related issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X