»   »  உருப்படுமா இந்நாடு? - கவிஞர் யுகபாரதி

உருப்படுமா இந்நாடு? - கவிஞர் யுகபாரதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏய்ப்பவர்கள் நிற்கவேண்டிய
எல்லா வரிசையிலும்
ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா
சோத்துக்கில்லாதவனிடம்
சொல்லாமல் வசூலிக்கிறது
கருப்புப்பணத்தை

பித்தலாட்ட பெரும்புள்ளிகள்
கட்டாத பணத்தையெல்லாம்
வட்டியோடு வாங்கப்பார்க்கிறது
பஞ்சப் பராரிகளிடம்

Poet Yugabharathi on Demonitisation

அதிக அதிகமாய்ச்
சொத்து சேர்த்தவர்களை
ஆட்சியிலே அமர்த்திவிட்டு
அன்னாடங் காய்ச்சிகளிடம்
ஆரம்பிக்கிறது விசாரணையை

கோடியிலே கொழுத்தவர்கள்
கொண்டுபோன மானத்தை
தேடிக்கொண்டிருக்கிறது
தேய்ந்தனின் கோவணத்தில்

ஓட்டுக்கு மை வைத்தே
ஒன்றும் நடக்கவில்லை. அதற்குள்
நோட்டுக்கு மை வைக்க
நுழைகிறது நடவடிக்கை

பத்துக்கு நூறாக
பணமுதலைப் பெருத்திருக்க
ஒப்புக்குக் கணக்கெழுதி
உருப்படுமா இந்நாடு?

ஒண்ணுக்கு வந்தால்கூட
ஒதுங்கவும் வழியில்லாத
வங்கிகளை வைத்துக்கொண்டு
எண்ணம் பலிக்குமென்று
எத்தனைநாள் பேசுவது?

ரூபாயில் சிரிக்கிறார் காந்தி
சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
மக்கள்!

Read more about: யுகபாரதி, money, ban
English summary
Poet Yugabharathi's poem on PM Modi's demonitisation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil