»   »  'புலி'யால் வந்த சிக்கல்... போக்கிரி ராஜா வெளியாவதில் இழுபறி!

'புலி'யால் வந்த சிக்கல்... போக்கிரி ராஜா வெளியாவதில் இழுபறி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் புலி படத்தின் தோல்வியால் வந்த நஷ்டம், இப்போது அதன் தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தின் கழுத்தை இறுக்க ஆரம்பித்துள்ளது.

புலி படத்தை பிடி செல்வகுமாரும், ஷிபு தமீன்ஸூம் தயாரித்து வெளியிட்டனர். மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. முதல் முறையாக இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு அறிக்கையும் வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள்.


Pokiri Raja in trouble

புலி படத்துக்குப் பிறகு அதன் தயாரிப்பாளர்கள் ஜீவாவை வைத்து போக்கிரி ராஜாவை எடுத்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்ட நிலையில், படத்துக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.


புலியின் நஷ்டத்தை ஈடு செய்யாமல் போக்கிரி ராஜாவை வெளியிடக் கூடாது என்பதுதான் அந்த முட்டுக் கட்டை. எனவே தயாரிப்புத் தரப்பு என்னதான் வெளியீட்டுத் தேதியை அறிவித்தாலும், அந்தத் தேதியில் போக்கிரி ராஜா வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில்.English summary
According to sources, Jiiva starring Pokkiriraja is facing trouble in release due to Vijay's Puli loss in BO.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil