போக்கிரி படம் ஒரு பிளாப்: இயக்குனரின் சர்ச்சை ட்வீட்
Recommended Video

ஹைதராபாத்: போக்கிரி படம் பிளாப் என்று சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் தனது மகன் ஆகாஷை ஹீரோவாக்கியுள்ளார். அவர் தனது மகன் ஆகாஷை வைத்து மெஹ்பூபா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்த காலத்தில் நடந்த காதல் கதை தான் மெஹ்பூபா.
போக்கிரி
மெஹ்பூபா படத்தின் சில பகுதிகளை பார்த்தேன். அதனுடன் ஒப்பிட்டால் மகேஷ் பாபுவின் போக்கிரி பிளாப். தனது மகன் மீது வைத்துள்ள அன்பால் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். இந்த படம் அருமையாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

ரசிகர்கள்
ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு, போக்கிரி ஒன்றும் பிளாப் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர்.
ராம் கோபால் வர்மா ஜூனியர் என்.டி.ஆரின் டெம்பர் படத்திற்கும் இப்படி தான் கூறினார். ஆனால் டெம்பர் படத்தால் போக்கிரிக்கு அருகில் கூட வர முடியவில்லை என்று மகேஷ் பாபு ரசிகர்கள் கூறியுள்ளனர்.

மோதல்
அது எப்படி எங்கள் தலைவர் ஜூனியர் என்.டி.ஆரின் படம் பற்றி நீங்கள் பேசலாம் என்று அவரின் ரசிகர்கள் மகேஷ் பாபுவின் ரசிகர்களுடன் ட்விட்டரில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











