»   »  புத்தாண்டையொட்டி 100 துப்புரவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கிய போக்கிரி ராஜா படக்குழு!

புத்தாண்டையொட்டி 100 துப்புரவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கிய போக்கிரி ராஜா படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புத்தாண்டையொட்டி 100 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வேட்டி சேலை, பெட்ஷீட் உள்ளிட்ட பொருள்களை ஜீவாவின் போக்கிரி ராஜா படக்குழு வழங்கியது.

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘போக்கிரி ராஜா'. இவர்களுடன் இப்படத்தில் மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.


ராயப்பா

ராயப்பா

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கியிருக்கிறார். பி.டி.செல்வகுமார் வழங்க டி.எஸ்.பொன்செல்வி தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


மழை வெள்ளம்

மழை வெள்ளம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை, வெள்ளத்தால் தமிழகத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் சாலைகளில் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த குப்பைகளை ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் ‘போக்கிரி ராஜா' படக்குழு சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் 100 பேருக்கு வேட்டி, புடவை, பெட்ஷீட், அரிசி போன்றவை வழங்கப்பட்டன.


ஜீவா - ஹன்சிகா

ஜீவா - ஹன்சிகா

இந்நிகழ்ச்சியில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் படக்குழுவினர்கள் பலர் கலந்துக் கொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பொருட்களை வழங்கினர்.


மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதன்பின் பேசிய ஜீவா, "2015ம் ஆண்டு உழைப்புக்கு 2016ல் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நடித்துள்ள ‘போக்கிரி ராஜா', ‘திருநாள்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, புடவை கொடுத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.


English summary
The Crew of Jiiva's Pokkiri Raaja has distributed free gifts to Sanitary workers of Chennai on the eve of New Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil