»   »  ஜீவாவின் 25வது படம்போக்கிரி ராஜா... சென்சாரில் யு சான்று!

ஜீவாவின் 25வது படம்போக்கிரி ராஜா... சென்சாரில் யு சான்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீவா, ஹன்சிகா நடித்துள்ள போக்கிரி ராஜா படம் தணிக்கைக் குழுவில் அனைவரும் பார்க்கக் கூடிய படம் எனும் வகையில் யு சான்று பெற்றுள்ளது.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் தலைப்பு எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான ரஜினி படத்தினுடையது. ரஜினி மற்றும் ஏவிஎம் அனுமதியுடன் இந்தத் தலைப்பை வைத்துள்ளனர்.


Pokkiri Raja gets clean U

பிடி செல்வகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.


இந்தப் படம் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தை மண்டல தணிக்கை அதிகாரிகளுக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர்.


படத்தைப் பார்த்த அதிகாரிகள், அனைவரும் பார்க்கக் கூடிய பொழுதுபோக்குப் படமாக வந்துள்ளதால் யு சான்றிதழ் வழங்கினர்.


ஜீவாவின் 25 வது படமான போக்கிரி ராஜா வரும் மார்ச் 4-ம் தேதி வெளியாகிறது.

English summary
Jiiva's 25th film Pokkiri Raja has been censored with a clean 'U' certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil