»   »  துணை நடிகர் கொலை: விசாரிக்காமல்ஃபைலை மூட முயன்ற போலீஸ்

துணை நடிகர் கொலை: விசாரிக்காமல்ஃபைலை மூட முயன்ற போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள ஜீவா என்பவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் ஜீவாவின் உடலை அனாதைப் பிணம் என்று கூறி கேஸை முடிக்க முயன்று இப்போது சிக்கலில் மாட்டியுள்ளது போலீஸ்.

சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள ஜீவா என்பவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் ஜீவாவின் உடலை அனாதைப் பிணம் என்று கூறி கேஸை முடிக்க முயன்று இப்போது சிக்கலில் மாட்டியுள்ளது போலீஸ்.

சென்னை அருகே போரூர் ஏரிப் பகுதியில் வசித்து வந்தவர் ஜீவா. சிவாஜி, வசந்தம் வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் வடபழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஜீவா. அப்போது 3 பேர் அடங்கிய கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. ஜீவாவை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.

அடுத்து நாள் அக்கும்பல் செல்வராஜை சந்தித்தது. நாங்கள் ஜீவாவை முடித்து விட்டோம். இதை வெளியில் சொல்லக் கூடாது, சொன்னால் உனக்கும் அதே கதிதான் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் செல்வராஜ் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தை அணுகிய அவர் அங்கு இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் நடந்ததை விலாவாரியாக எழுதி, ஜீவா கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுவதால் தீவிரமாக விசாரிக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால் அவரது புகாரை அலட்சியப்படுத்திய அழகேசன், காணாமல் போயிருப்பார் ஜீவா என்று கூறி காணாமல் போனதாக புகார் பதிவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த 27ம் தேதியன்று நந்தம்பாக்கம் ராணுவ நினைவிடம் அருகே பிணமாகக் கிடந்தார் ஜீவா. நந்தம்பாக்கம் போலீஸார் ஜீவாவின் உடலை மீட்டு மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

ஜீவா யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதைக் கூட விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைத்தனர். இந்த நிலையில் செல்வராஜுக்கு ஜீவா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. அவர் பிணமாக கிடந்த நந்தம்பாக்கம் பகுதியில் போய் விசாரித்துள்ளார்.

அவரது விசாரணையில் இறந்தது ஜீவாதான் என்று உறுதியானது. இதையடுத்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் போய் ஜீவா குறித்துக் கூறியுள்ளார். இதையடுத்து நந்தம்பாக்கம் போலீஸார் ஜீவா கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜீவாவின் மரணத்தை மர்ம மரணம் என்று கூறி அப்படியே வழக்கை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்தனராம் நந்தம்பாக்கம் போலீஸார். ஆனால் செல்வராஜ் கொடுத்த தகவலால் இப்போது வழக்கை மீண்டும் திறந்து விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இப்படியும் காவல்துறை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil