»   »  நேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐபிஎல் 2018, நடிகர் ஷாருக்கான் மட்டும் நேற்று கருப்பு உடையில் வந்திருந்தார்- வீடியோ

சென்னை: நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது கருப்பு சட்டை அணிய அனுமதி இல்லாதபோதும் ஒரேயொருவர் மட்டும் கருப்பு சட்டையில் வந்திருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இடையே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அதையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று ஐபிஎல் போட்டி நடந்தது.

 சேப்பாக்கம்

சேப்பாக்கம்

போட்டி துவங்குவதற்கு முன்பு அண்ணா சாலை, சேப்பாக்கம் பகுதி போராட்டக்களமாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

 கொடி

கொடி

போட்டி நடந்த அரங்கிற்குள் கருப்பு சட்டை அணிந்து செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. கமாண்டோக்கள் கூட பச்சை நிற உடை தான் அணிந்திருந்தனர். கருப்புக் கொடி எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டது.

கருப்பு

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. ஆட்டத்தை பார்க்க வந்த ஷாருக்கான் கருப்பு நிற டி சர்ட் அணிந்திருந்தார். அரங்கில் அவர் மட்டும் தான் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார்.

டோணி

பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த சிஎஸ்கே கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா ஆகியோருடன் புகைப்படம் எடுத்தார் ஷாருக்கான். ஷாருக்கான் தனது மகள் சுஹானாவை அழைத்து வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

English summary
While police denied entry to those who wear black shirt to Chepauk stadium, KKR owner cum actor Shah Rukh Khan was wearing black during yesterday's match between his team and CSK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X