»   »  கோவையில் தெறி படத்தை திருட்டுத்தனமாக தியேட்டரில் பதிவு செய்த சேனல் ஊழியர்கள் கைது!

கோவையில் தெறி படத்தை திருட்டுத்தனமாக தியேட்டரில் பதிவு செய்த சேனல் ஊழியர்கள் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: இன்று வெளியான விஜய்யின் தெறி படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்ய முயன்ற சேனல் ஊழியர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெறி படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில அரங்குகள் படத்தை வெளியிட மறுத்துவிட்டன. டிக்கெட் விலை மற்றும் படத்துக்கு வைக்கப்பட்ட விலையை அவர்கள் ஏற்கவில்லை.


Police arrested 2 persons for recording Theri in Theater

இந்த நிலையில் கோவையில் உள்ள சாந்தி (விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது) தியேட்டரில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிறப்புக் காட்சியில், படத்தின் அரை மணி நேரக் காட்சிகளை ஒரு தனியார் சேனல் மூலம் திருட்டுத்தனமாக பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.


இந்த தகவல் அறிந்த மோனிகா பிலிம்ஸ் செந்தில், தகவலை போலீசாருக்குத் தெரிவித்தார். உடனடியாக போலீசார் தியேட்டருக்கு விரைந்து வந்து தெறி படத்தை வீடியோவில் பதிவு செய்த நபர்களைப் பிடித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தியேட்டர் நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

English summary
Coimbatore Police have arrested private channel employees for recording Theri movie in Santhi Theater.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos