twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதையைத் திருடிவிட்டார் - ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார்!

    By Shankar
    |

    Ram Gopal Varma
    மும்பை: என் கதையை திருடி டிபார்ட்மெண்ட் படத்தை எடுத்துள்ளார் என ராம் கோபால் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் எழுத்தாளர் தனிஷ் ரஸா.

    புதிய எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கதைகளைக் கேட்டு, அந்த 'நாட்'டை அப்படியே சுட்டு, படம் செய்யும் பிரபலங்கள்தான் இன்றைக்கு இந்திய சினிமாவில் அதிகம். அதுவும் பாலிவுட்டில் இது சகஜம். பிரச்சினையாகிவிட்டால், புகார் கொடுத்தவர் யாரென்றே தெரியாது என டபாய்த்து விடுவது வழக்கம்.

    சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா இதில் கில்லாடி. சுட்டுப் படம் எடுப்பதில் இவருக்கு டாக்டர் பட்டமே தரலாம். கேட்டால் இன்ஸ்பிரேஷன் என்று தப்பித்துக் கொள்வது இவர் ஸ்டைல்.

    அமிதாப் பச்சன் - சஞ்சய் தத் நடித்துள்ள படம் டிபார்ட்மெண்ட். ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வரவிருக்கிறது.

    இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் தன்னுடையது என்றும், சேர்ந்து பணியாற்றலாம் என அழைத்து தன் கதையை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ராம் கோபால் வர்மா ஏமாற்றிவிட்டதாகவும் தனிஷ் ரஸா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனிஷ் ரஸா அளித்துள்ள மோசடி புகாரில், "ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் நீரஜ் சர்மா என்பவர் கடந்த 2010 ஜூன் மாதம் என்னைச் சந்தித்தார். டிபார்ட்மென்ட் படத்தின் திரைக்கதை தொடர்பாக என்னுடன் பேச விரும்புவதாகக் கூறினார். நான் உடனடியாக ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்துக்கு சென்றேன். எனது சில ஸ்க்ரிப்டுகளைப் படித்த பிறகு, நாம் சேர்ந்து பணியாற்றலாம் என்று கூறினார் ராம்கோபால். உடனே வேலையை ஆரம்பிக்கச் சொன்னார். நான் ஜூலை 19-ம் தேதி டிபார்ட்மென்ட் படத்துக்கான திரைக்கதையின் முதல் பகுதியை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதை ஓகே செய்தார்.

    அடுத்த பகுதியை எழுத ஆரம்பித்தபோது, ராம் கோபால் வர்மா என்னுடன் டிஸ்கஸ் செய்து சில காட்சிகளை உருவாக்கினார். அப்போதுதான் எனக்கு சம்பளம் பேசப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எதையும் போடவில்லை ராம் கோபால். நான் ஒப்பந்தம் போடுமாறு கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் இழுத்தடிப்பது தெரிந்ததால், எழுதுவதை நிறுத்திவிட்டேன். உடனே எனக்கு இமெயில் மூலம் ஒரு ஒப்பந்தத்தை அனுப்பினர். ஆனால் தபாலில் அதன் பிரதியை அனுப்பவில்லை.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2011-ல் டிபார்ட்மென்ட் படம் கைவிடப்பட்டதாக ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். எனவே நான் பணம் கேட்பதை நிறுத்திவிட்டு, வேறு வேலை நிமித்தமாக டெல்லிக்கு வந்துவிட்டேன். ஆனால் இப்போது, அதே டிபார்ட்மென்ட் படத்தை எடுத்து ரிலீஸ் செய்யப் போவதாக விளம்பரங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    இந்தப் படத்தின் கதை, திரைக்கதை என்னுடையதுதான் என்பதற்கு என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. நான் எழுதிக் கொடுத்த திரைக்கதையில் ராம் கோபால் தன் கைப்பட எழுதியதன் பிரதி கூட என்னிடம் உள்ளது. அனைத்துக்கும் மேல், அந்த ஒப்பந்த நகலும் உள்ளது," என்று கூறியுள்ளார்.

    தனிஷ் ரஸா யாரென்றே தெரியாது!

    இந்தப் புகார் குறித்து ராம் கோபால் வர்மாவிடம் கேட்டபோது, "இந்த தனிஷ் ரஸா யாரென்றே எனக்குத் தெரியாது. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைச் சந்திப்பதால் எனக்கு எதுவும் நினைவில் இல்லை. என் அலுவலகம் இதையெல்லாம் டீல் செய்துகொள்ளும்," என்றார்.

    English summary
    Stories of reputed directors getting 'inspired' by newcomers and then completely forgetting about them abound in Bollywood. And this time it involves Ram Gopal Varma and his upcoming film Amitabh Bachchan-Sanjay Dutt-starrer Department.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X