»   »  வீட்டு வாடகை தரல சார்: பிரபல நடிகர் மீது ஹவுஸ் ஓனர் போலீசில் புகார்

வீட்டு வாடகை தரல சார்: பிரபல நடிகர் மீது ஹவுஸ் ஓனர் போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிக்மகளூர்: சிக்மகளூர் காவல் நிலையத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் ஒரு இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. அவர் வாராஸ்தாரா என்ற கன்னட தொலைக்காட்சி தொடரை தயாரித்து வருகிறார்.

Police Complaint Filed Against Kichcha Sudeep!

இந்த தொடருக்காக சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் அந்த வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை என்று உரிமையாளர் காவல் நிலையத்தில் சுதீப் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளரான தீபக் மயூர் கூறும்போது,

வாரஸ்தாரா குழு என் வீட்டில் 3 மாதம் ஷூட்டிங் நடத்தியது. நாள் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வாடகை பேசப்பட்டது. அவர்கள் வாடகையில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு ரூ. 1.5 லட்சம் பாக்கி வைத்தனர். கேட்டும் கொடுக்கவில்லை.

வீட்டை சுற்றியுள்ள விவசாய நிலத்தையும் நாசப்படுத்திவிட்டனர். அதற்கு இழப்பீடு கேட்டதற்கும் கொடுக்கவில்லை என்றார்.

English summary
Actor Kichcha Sudeep might seem to be in a bit of a trouble as Chikmagaluru police have filed a complaint against him. The complaint is regarding the non-payment of the house rent.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos