TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு... நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார்!

சென்னை : வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80 மற்றும் 90களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை பானுப்ரியா. சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்தன.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிய அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
தனது புகாரில் அவர், 'மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு எனது மகளை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினோம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது 'எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்' என மிரட்டினார்கள்" என அச்சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் புகார் பற்றி சாமர்லகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை பானுப்ரியாவின் அண்னன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பாலியல் தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.