»   »  சேரி பிஹேவியர்.... காயத்ரி ரகுராமை பிசிஆர் சட்டத்தில் கைது செய்ய போலீசில் புகார்!

சேரி பிஹேவியர்.... காயத்ரி ரகுராமை பிசிஆர் சட்டத்தில் கைது செய்ய போலீசில் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவைப் பார்த்து சேரி பிஹேவியர் என்று திட்டிய நடிகை காயத்ரி ரகுராமை உடனடியாகக் கைது செய்யக் கோரி சென்னை பெருநகர காவல் நிலையத்தில் இன்று புகார் தரப்பட்டுள்ளது.

துருவாசன் என்ற வக்கீல் இந்த புகாரைத் தந்துள்ளார்.

Police complaint on actress Gayathri Raghuram

கடந்த ஜூலை 14-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடன் பேசிக் கொண்டிருந்த ஓவியாதை திடீரென 'சேரி பிஹேவியர்' காட்டுவதாகத் திட்டினார் காயத்ரி ரகுராம். அரசுப் பள்ளியில் படித்து, சாதாரண குடும்பத்திலிருந்து வந்து இப்போது பிரபல நடிகையாகத் திகழ்பவர் ஓவியா. ஆனால் அவரை திட்டமிட்டு வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறார் காயத்ரி. ஒரு டெலிவிஷன் ஷோ என்பதையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் மிகக் கேவலமாக ஓவியாவை நடத்துகிறார் இந்த காயத்ரி.

அதன் ஒரு வெளிப்பாடாக அவரைப் பார்த்து சேரியில் உள்ளவர்களைப் போல நடந்து கொள்கிறாய் எனத் திட்டினார்.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது சமூக வெளியில். பலரும் கமல், விஜய் டிவி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் கமல் இதற்கு பதிலே சொல்லவில்லை. தன் நண்பரின் மகள் என்பதால் காயத்ரியை அவர் காப்பாற்றவே முனைந்தார்.

சூழல் உணர்ந்த காயத்ரியின் தாயார், "என் மகள் பேசியது தவறுதான். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார். ஆனால் இப்போது வரை காயத்ரி மன்னிப்புக் கேட்கவும் இல்லை.

இந்த நிலையில்தான், காயத்ரி மீது பிசிஆர் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என இன்று சென்னை பெருநகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் துருவாசன்.

English summary
Dhuruvasan, an advocate has filed a police complaint against Actress Gayathri Raghuram for using the word 'Cheri Behavior' towards actress Oviya in Big Boss programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil