twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார்

    By Shankar
    |

    சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வக்கிரமாகவும் மோசமாகவும் பாடல் வரிகள் கொண்ட வீடியோவை உருவாக்கியுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அனிருத்

    அனிருத்

    ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரே பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினர். அடுத்தடுத்த படங்களில் ஹிட் பாடல்கள் தந்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

    மியூசிக் வீடியோ

    மியூசிக் வீடியோ

    இவர் புதிதாக Aint nobody ****in with my music என்ற பெயரில் மியூசிக் வீடியோ வெளியிட்டுள்ளார். யுட்யூபில் இந்த வீடியோ காணக் கிடைக்கிறது. ஆனால் கமெண்ட் பகுதியை நீக்கியுள்ளனர் அனிருத் குழுவினர். இந்த வீடியோ படு ஆபாசமாக உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

    வக்கீல் புகார்

    வக்கீல் புகார்

    சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள Aint nobody ****in with my music என்ற மியூசிக் வீடியோ படுமோசமாகவும் பெண்களை, தாய்மார்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.

    சமூக ஒழுங்கு கெடும்

    சமூக ஒழுங்கு கெடும்

    அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளோ மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும்.

    தண்டனை

    தண்டனை

    குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளுக்கு அடிகோலும்.

    சினிமாடோகிராப் சட்டம் 1957ன் படி இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர் வேண்டுமென்றே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு 2000-ஐயும் அனிருத் மீறியுள்ளார்.

    அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    A Chennai lawyer has filed petition on music director Anirudh for released an abusive and vulgar music video album.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X