கமலின் விக்ரம் பட ஷுட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... என்ன காரணம் ?

சென்னை : கமல் நடிக்கும் விக்ரம் படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாகவும் இந்த படம் இருந்து வருகிறது.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனஸ் தயாரித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தை ரொம்ப ஸ்பெஷலாகவும், அதிக எதிர்பார்ப்புக்களுடனும் எடுத்து வருகிறது ராஜ் கமல் ஃபிலிம்ஸ்.

மல்டி ஸ்டார் படம்

மல்டி ஸ்டார் படம்

அனிருத் இசையமைத்து வரும் விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத் உள்ளிட்டோர் வில்லன் ரோலிலும், காளிதாஸ் ஜெயராம் கமலின் மகன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு கட்ட ஷுட்டிங் நிறைவு

இரண்டு கட்ட ஷுட்டிங் நிறைவு

ஏற்கனவே விக்ரம் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து விட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.

அனுமதி மறுத்த போலீஸ்

அனுமதி மறுத்த போலீஸ்

விக்ரம் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை தமிழ்நாடு போலீஸ் மியூசியத்தில் நடத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ் விரும்பியது. அக்டோபர் 26 மற்றும் 27 ம் தேதிகளில் மிக முக்கியமாக சீன்களை இங்கு எடுக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஷுட்டிங் நடத்த அனுமதி அளிக்க சென்னை போலீஸ் மறுத்து விட்டது. சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனுமதி தர போலீஸ் மறுத்து விட்டதாம்.

 இது தான் காரணமா

இது தான் காரணமா

அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி அதிகம் மக்கள் கூடும் சமூக, அரசியல், பொழுதுபோக்கு, மத நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 ம் தேதி வரை இந்த தடை தொடர்கிறது. இதனால் அரசுக்கு சொந்தமான இடத்தில் விக்ரம் படத்திற்கான செட் வேலைகள் மற்றும் ஷுட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் தேடும் டீம்

இடம் தேடும் டீம்

திட்டமிட்டபடி ஷுட்டிங் நடத்த போலீஸ் அனுமதிக்காததால் லோகேஷ் கனகராஜ், மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை தள்ளிவைத்துள்ளாராம். போலீஸ் மியூசியத்தில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்த அதே காட்சிகளை வேறு ஒரு லெகேஷனில் எடுப்பதற்காக, இடம் தேடி வருகிறார்களாம் படக்குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X