»   »  பாவனா விவகாரம்: நடிகர் திலீப் கைது செய்யப்பட்டாரா?

பாவனா விவகாரம்: நடிகர் திலீப் கைது செய்யப்பட்டாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு சென்றபோது காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி இன்னும் கைது செய்யப்படவில்லை.

பல்சர் சுனியை ஏவி பாவனாவை அசிங்கப்படுத்தியது நடிகர் திலீப் என்று கிசுகிசுக்கப்பட்டது.

திலீப்

திலீப்

நான் தாய், மனைவி, மகளுடன் வசித்து வருபவன். நான் போய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துவேனா என திலீப் கேட்டுள்ளார். பாவனாவுக்கு நடந்த கொடுமையை நினைத்து தான் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

பாவனா விவகாரம் தொடர்பாக போலீசார் அலுவாவில் உள்ள நடிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விசாரித்து அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது.

கைதா?

கைதா?

திலீப்பின் வீடு அலுவாவில் உள்ளது. இந்நிலையில் திலீப் கூறியிருப்பதாவது, போலீசார் அலுவாவில் எந்த நடிகரின் வீட்டிற்கும் சென்று விசாரிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. எங்கள் வீட்டிற்கும் போலீசார் வரவில்லை என்றார்.

பெண்கள்

பெண்கள்

பெண்களை மதிப்பவன் நான். நான் பணியாற்றும் திரையுலகை சேர்ந்த நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையால் கவலையும் கோபமும் அடைந்துள்ளேன். இதில் சிலர் வேண்டும் என்றே என் பெயரை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என்கிறார் திலீப்.

English summary
Actor Dileep is not arrested in connection with Bhavana case. He said that police didn't investigate him in this issue as he has nothing to do with it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil