»   »  மதுரையில் நடிகை சமந்தாவின் காரை குத்திக் கிழித்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி!

மதுரையில் நடிகை சமந்தாவின் காரை குத்திக் கிழித்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி நடந்தது.

சில ரசிகர்கள் சமந்த வந்த காரின் டயரை குத்திக் கிழித்தனர்.

நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.

Police lathi charge at actress Samantha function

சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர்.

சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது.

Police lathi charge at actress Samantha function

நிலைமை மோசமாவதை உணர்ந்த உடனே சமந்தா திரும்ப முயன்றார். ஆனால் அவர் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சமந்தா வந்த சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர் சிலர்.

Police lathi charge at actress Samantha function

ரசிகர்களின் முற்றுகை தாங்காமல் ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

பின் மாற்றுக் காரில் சமந்தா அனுப்பி வைக்கப்பட்டார்.

English summary
In a private function at Madurai, actress Samantha's car was damaged by some fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil