twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை கங்கனா மீது பிரபல பாடலாசிரியர் அவதூறு புகார்.. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

    By
    |

    மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மீது பிரபல பாடலாசிரியர் கொடுத்த அவதூறு புகாரை விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

    இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

    ரத்தமும் சதையுமான கேரக்டர் அது.. 'தலைவி'யில் நடித்தது பற்றி நடிகை கங்கனா நெகிழ்ச்சி! ரத்தமும் சதையுமான கேரக்டர் அது.. 'தலைவி'யில் நடித்தது பற்றி நடிகை கங்கனா நெகிழ்ச்சி!

    ஜாவித் அக்தர்

    ஜாவித் அக்தர்

    இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருவதும் அது சர்ச்சைக்கு உள்ளாவதும் வாடிக்கையாக இருக்கிறது. அவர் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் பற்றி சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

    அவதூறு கருத்து

    அவதூறு கருத்து

    டிவி பேட்டி ஒன்றில் அவர் அவதூறு கருத்துகளை கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை கங்கனாவுக்கு எதிராக, மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அவதூறு கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார்.

    ஆதாரமற்ற புகார்

    ஆதாரமற்ற புகார்

    அதில், நடிகை கங்கனா டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாகக் கூறியிருந்தார். இதற்காக நடிகை கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு இருந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று வந்தது.

    பெயருக்கு களங்கம்

    பெயருக்கு களங்கம்

    அப்போது ஜாவித் அக்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாவித் அக்தர் கடந்த 55 ஆண்டுகளாக நல்ல பெயரை உருவாக்கி வைத்து உள்ளார். டி.வி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக கங்கனா ஆதாரமற்ற கருத்துகளை கூறி அவர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றார்.

    போலீசுக்கு உத்தரவு

    போலீசுக்கு உத்தரவு

    வழக்கு விசாரணையின் போது ஜாவித் அக்தரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இந் நிலையில் ஜாவித் அக்தரின் புகாரை விசாரித்த கோர்ட், கங்கனாவுக்கு எதிராக விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை ஜனவரி 16 ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    A metropolitan magistrate court in Mumbai on Saturday directed police to investigate Javed Akhtar’s complaint of defamation against Kangana for her alleged personal comments made during an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X