»   »  சிரஞ்சீவி மகளுக்கு பாதுகாப்பு நீட்டிப்பு

சிரஞ்சீவி மகளுக்கு பாதுகாப்பு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil
Click here for more images

பெற்றோர் எதிர்ப்பை மீறி பரத்வாஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மேலும் 2 வாரங்கள் போலீஸ் பாதுகாப்பை நீட்டித்துள்ளது.

சிரஞ்சீவியின் 2வது மகளான ஸ்ரீஜா, சிஏ படித்து வந்தார். இவருக்கும் பிடெக் படிக்கும் மாணவர் பரத்வாஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. பரத்வாஜ் வேறு சமூகத்தை சேர்ந்தவர்.

இதனால் சிரஞ்சீவி தனது மகளின் காதலை ஏற்க மறுத்ததுடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மகள் ஸ்ரீஜாவை வீட்டு சிறையில் வைத்தார்.

கடந்த 1 வருடத்திற்கு மேலாக வீட்டு சிறையில் இருந்த ஸ்ரீஜா தனது காதலரை போன் மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் தொடர்பு கொண்டு வந்தார். இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீஜா தனது வீட்டாரை ஏமாற்றிவிட்டு காதலர் பரத்வாஜூடன் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மகளுக்கு திருமணம் ஆன செய்தி கேட்ட சிரஞ்சீவி உட்பட அவரின் குடும்பத்தார் அனைவரும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். சினிமா உலகில் மட்டுமின்றி, பல அரசியல்வாதிகளின் பழக்கம் வைத்திருந்த சிரஞ்சீவிக்கு தனது மகள் செய்த இந்த காரியம் பெருத்த அவமானமாக போய்விட்டது.

சிரஞ்சீவியின் ரசிகர்களும் ஸ்ரீஜா-பரத்வாஜ் தம்பதி மீது கடும் கோபம் கொண்டனர். இவர்களால் தங்களுக்கு எந்த நேரமும் ஆபத்து வரும் என்ற நிலையில் இருவரும் டெல்லிக்கு சென்று அங்கு பிங்கி ஆனந்த் என்ற பெண் வழக்கறிஞர் மூலமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு செய்தனர்.

இவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் ஸ்ரீஜாவின் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் கூறியதாவது,

ஸ்ரீஜாவின் தந்தை சிரஞ்சீவி எழுதிய கடிதம் வந்துள்ளது. அதில் ஸ்ரீஜாவின் திருமணத்தை தான் முழுமனதாக ஏற்றுக் கொள்வதாகவும், எங்களைக் கண்டு அவர்கள் பயப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது டெல்லியில் தங்கியுள்ள ஸ்ரீஜா-பரத்வாஜ் தம்பதியினருக்கு போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண், ஸ்ரீஜாவிடம் சமாதானம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

Read more about: sirija

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil