»   »  இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்

இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுதுள்ளார்.

பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்நிலையில் போலீசார் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை

விசாரணை

காவ்யா மாதவனிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்று மலையாள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அழுகை

அழுகை

விசாரணையின் போது காவ்யா மாதவன் அழுதாராம். அவரிடம் முக்கியமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்.

பல்சர் சுனி

பல்சர் சுனி

நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார்?, பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.

பணம்

பணம்

பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.

English summary
Kerala police have questioned actress Kavya Madhavan for six hours about the abduction of a popular malayalam actress who was once her friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil