»   »  அடித்துக் கொடுமைப்படுத்திய விவகாரம்... "முரட்டுக்காளை" ரதியின் கணவர் வாக்குமூலம்!

அடித்துக் கொடுமைப்படுத்திய விவகாரம்... "முரட்டுக்காளை" ரதியின் கணவர் வாக்குமூலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக முரட்டுக்காளை புகழ் நடிகை ரதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது கணவரை அழைத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்த ரதி, பாலச்சந்தரின் 'ஏக் துஜே கே லியே' படம் மூலம் ஹிந்தியில் பிரபலமானார். முரட்டுக்காளை ரதிக்கு தமிழில் பிரபலத்தை அதிகரித்தது.

முன்னணி நடிகையாக வலம் வந்த போதே, கடந்த 1985ம் ஆண்டு அனில் விர்மானியை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

போலீசில் புகார்...

போலீசில் புகார்...

திருமணமாகி 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் கணவர் விர்மானி, தினமும் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்துவதாக, கண்ணீர் சிந்தியபடி, மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார் ரதி.

விளக்கம்...

விளக்கம்...

இதையடுத்து, விர்வானி மீது பல்வேறு வழக்குகளைப் போலீசார் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, விர்வானி நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தைப் போலீசாரிடம் அளித்தார்.

விசாரணை...

விசாரணை...

விர்வானி தரப்பு விளக்கம் தொடர்பாக தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். மேலும், ரதி வீட்டு வேலையாட்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது.

காரணம்...

காரணம்...

கட்டட வடிமைப்பு தொழிலில் ஏற்பட்ட இழப்பு தான், ரதி- விர்மானி இடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு...

வழக்குப் பதிவு...

ரதி கொடுத்த புகாரின் பேரில் விர்வானி மீது ஒர்லி போலீஸார், திருமணமான பெண்ணை சித்திரவதை செய்வது, காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குவது, குற்றச் சதி, குற்றச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Worli police said on Sunday that Anil Virmani, husband of actress Rati Agnihotri, recorded his statement with them late Saturday evening after being summoned by the investigating officers.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil