»   »  அக்கா, அம்மாவ நல்லா பார்த்துக்கோ: கடிதம் எழுதி வைத்த 'மைனா' நந்தினியின் கணவர்

அக்கா, அம்மாவ நல்லா பார்த்துக்கோ: கடிதம் எழுதி வைத்த 'மைனா' நந்தினியின் கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் எழுதி வைத்தது தெரிய வந்துள்ளது.

சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் மைனாவாக நடித்த நந்தினிக்கும் சென்னையில் ஜிம் வைத்திருந்த கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான ஓராண்டுக்குள் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திக்

கார்த்திக்

திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நந்தினி தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

விரக்தி

விரக்தி

நந்தினி பிரிந்து சென்ற விரக்தியில் கார்த்திக் ஜிம்மை விற்றுவிட்டாராம். இந்நிலையில் தான் அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடிதம்

கடிதம்

தற்கொலை செய்யும் முன்பு கார்த்திக் எழுதிய கடிதத்தில் தான் இந்த முடிவை எடுக்க நந்தினியின் தந்தையே காரணம் என்று எழுதியுள்ளாராம். மேலும் அக்கா, அம்மாவை நல்லா பார்த்துக்கோ என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.

போலீஸ்

போலீஸ்

கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார்த்திக் இறந்ததை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று நந்தினி தெரிவித்துள்ளார்.

English summary
Police have recovered a suicide note written by actress Nandini's husband Karthik before he took his life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil