»   »  வேறு பெண்ணுடன் தொடர்பு, பண மோசடி செய்தவர் நந்தினியின் கணவர் கார்த்திக்: போலீஸ்

வேறு பெண்ணுடன் தொடர்பு, பண மோசடி செய்தவர் நந்தினியின் கணவர் கார்த்திக்: போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீசார் கூறும்போது,

கார்த்திக்

கார்த்திக்

கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அதை மறைத்துவிட்டு நந்தினியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்த செய்தி அறிந்த வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார்.

கைது

கைது

வெண்ணிலா தற்கொலை செய்யும் முன்பு தான் இந்த முடிவை எடுக்க கார்த்திக் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டார். இதனால் நாங்கள் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தோம்.

நந்தினி

நந்தினி

கார்த்திக் கைது செய்யப்பட்டதால் நந்தினி கவலை அடைந்தார். இந்த சம்பவமே கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணமாகிவிட்டது.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

சிலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார் கார்த்திக். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதை திருப்பிக் கேட்டுள்ளனர்.

அம்மா வீடு

அம்மா வீடு

வெண்ணிலா வழக்கில் கார்த்திக் கைதான பிறகு நந்தினி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். மனஉளைச்சலில் இருந்த கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார் என்றனர் போலீசார்.

English summary
Police have told that actress Nandhini's husband had affair with another woman and he cheated few people of their money promising jobs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil