»   »  மஞ்சு வாரியரைப் பற்றி ஆபாசக் கருத்து... போலீஸ்காரர் அதிரடி சஸ்பென்ட்

மஞ்சு வாரியரைப் பற்றி ஆபாசக் கருத்து... போலீஸ்காரர் அதிரடி சஸ்பென்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியரின் பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பற்றி ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்த போலீஸ்காரர் கேரள காவல்துறையினரால் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

மஞ்சு வாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜோ அண்ட் தி பாய் திரைப்படம்' தற்போது வெற்றிகரமாக கேரளாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Police Suspended for Obscene Comment on Manju Warrier Face Book Page

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூரஜ் வெஞ்சரமோதுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் மஞ்சு வாரியர் பதிவு செய்திருந்தார்.

இந்தப் புகைப்படத்திற்கு பலரும் லைக் கொடுத்திருந்தனர். ஆனால் கேரள ஆயுதப்படை போலீசில் வேலை செய்த ரஞ்சுமோன் ஆபாசமாக தனது கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

இது குறித்து நடிகை மஞ்சு வாரியர் கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரிடம் புகார் செய்தார். அவர் விசாரணை நடத்தி போலீஸ்காரர் ரஞ்சுமோனை தற்போது சஸ்பென்ட் செய்திருக்கிறார்.

"அரசாங்க பணியில் ஒரு பொறுப்பான வேலையில் இருப்பவர்களே இப்படி செய்வது வேதனையளிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதே நேரம் தாங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதை அவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று மஞ்சு வாரியர் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

English summary
Actress Manju Warrier Facebook page Registered Obscene Comments by the Police, The Kerala police action was Suspended.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil