யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்த போலீஸ் - Yuvan
சென்னை: போலீசார் யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ஆடி கார் திருடு போனதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனது டிரைவரான நவாஸ் கான் தான் அந்த காரை திருடியதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் கார் திருடு போகவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நவாஸ் அவர் தங்கியிருக்கும் அபார்ட்மென்டின் அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கியிருக்கிறார்.
தூங்கிய மனிதர் தூக்கம் கெடாமல் இருக்க தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். யுவன் வீட்டில் உள்ளவர்கள் காரை தேடியபோது அது இல்லை, மேலும் நவாஸையும் காணவில்லை. உடனே கார் திருடு போனதாக போலீசில் புகார் அளித்துவிட்டனர்.
இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவர் தூங்கியதற்கு எல்லாம் கார் திருடு போய்விட்டது என்று புகார் அளித்து தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று போலீசார் யுவனை எச்சரித்துள்ளார்களாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.