»   »  50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்!

50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார்.

Political leader praised actor Vijay sethupathi

மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் என இந்தத் தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார் விஜய் சேதுபதி.

கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரிலிருந்து அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன். எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், 'விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்!' எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

English summary
Actor Vijay Sethupathi has donated Rs 50 lakh for the development of Ariyalur district education in the memory of Anita. Dr. Ramadoss, the founder of PMK, congratulated Vijay sethupathi for this help.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X