For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாவில் அரசியல் பேசிய ரஜினி.. நிஜத்திலும் ’தர்பார்’ அமைப்பாரா அண்ணாத்த? ஒரு சின்ன ரவுண்டப்!

  |

  சென்னை: எப்போ வருவேன்.. எப்படி வருவேன்னு.. யாருக்கும் தெரியாது! ஆனால், வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் என வசனம் பேசிய ரஜினிகாந்த், கடைசியா அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார்.

  இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்ற புதிய பஞ்ச் வசனத்தையும் அரசியலுக்காக பேசி தெறிக்கவிட்டுள்ளார் சூப்பர்ஸ்டார்.

  தமிழ் சினிமாவில் கிடைத்த சிம்மாசனம், தமிழக அரசியலிலும் ரஜினிகாந்துக்கு கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

  சினிமாவில் அரசியல் நெடி

  சினிமாவில் அரசியல் நெடி

  எம்.ஜி.ஆரை போலவே சினிமாவில் ரஜினிகாந்தும் அரசியல் நெடியை பல வருடங்களாகவே நல்லா தூக்கலாகவே போட்டு தமிழக மக்கள் மத்தியில் ஒரு ஏக்கத்தையும் தாக்கத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். சினிமா பட தலைப்புகள், பாடல்கள், வசனங்கள் என ரஜினியின் சினிமா படங்களில் இருக்கும் அரசியல் குறித்து ஒரு சின்ன ரவுண்ட் அப் செய்வோம்.

  கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

  கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

  முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவான முத்து படத்தில், காதலி மீனாவுடன் பாடும் டூயட் பாடலில், கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு.. காலத்தின் கையில் அது இருக்கு என பாடி இருந்தார். என்னமோ திட்டம் இருக்கு என்று பதிலும் வரும் அந்த திட்டம் இப்போது தான் ஆரம்பமாக போகிறது.

  சிங்கம் ஒன்று புறப்பட்டதே

  சிங்கம் ஒன்று புறப்பட்டதே

  இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த அருணாச்சலம் படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் தான். ஆனால், அந்த படத்தில், 30 நாட்களில் 300 கோடியை செலவு செய்ய வேண்டும் என்கிற இடத்தில், ரஜினி தனியாக ஒரு கட்சியையே ஆரம்பிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். சிங்கம் ஒன்று புறப்பட்டதே, அதற்கு நல்ல காலம் பொறந்துடுச்சு, நேரம் நெருங்கிடுச்சு என அருணாச்சலம் படம் சமயத்திலும் ரஜினியின் அரசியல் என்ட்ரியை சினிமா மூலம் எதிர்பார்த்தனர்.

  அரசியலிலும் ஒரு கை பார்க்கலாமே

  அரசியலிலும் ஒரு கை பார்க்கலாமே

  படையப்பா படத்தில் கிரானைட் மலையை குடைந்து மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறும் ரஜினிகாந்த், ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே பாடலுக்கு முன்பாக, அங்கே கூடும் அரசியல் தலைவர்கள், அதான் தொட்டது எல்லாம் துலங்குதே, அரசியலிலும் ஒரு கை பார்க்கலாமே என கே.எஸ். ரவிக்குமார் சீன் வைத்திருப்பார்.

  முதல்வர் வரம்

  முதல்வர் வரம்

  எல்லாவற்றுக்கும் மேலாக பாபா படத்தின் போது, ரஜினி அதி தீவிரமாக அரசியலுக்குள் நுழைவதை முடிவு செய்தே அந்த படத்தை எடுத்தது போல இருக்கும். பாபாஜி அருளால் ரஜினிக்கு கிடைத்த வரத்தை பயன்படுத்தி முதல்வராகவே ஆகும் நிலை உருவாகி இருக்கும். கிளைமேக்ஸ் காட்சியில், இமயமலையா? தமிழ்நாடு அரியாசனமா? என்கிற நிலையில், ரஜினிகாந்த் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என பாடியது போலவே, தமிழ் நாட்டு மக்களுக்காக உடலையும் உயிரையும் கொடுப்பேன் என அரசியல் களத்தில் குதிப்பதாக கிளைமேக்ஸ் அமைந்திருக்கும்.

  தனி ராஜாங்கம்

  தனி ராஜாங்கம்

  அரசியலில் இறங்கி தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை என்கிற ரீதியில் சிவாஜி படத்தில், ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய தவறியதை எல்லாம் செய்து தனி ராஜாங்கத்தையே ரஜினிகாந்த் நடத்துகிறார் என இயக்குநர் ஷங்கர் காட்டி இருப்பார். மேலும், சிவாஜியும் நான் தான் எம்ஜிஆரும் நான் தான் என சொல்லும் அரசியல் பஞ்ச் அசத்தல்.

  தர்பார் டைட்டில்

  தர்பார் டைட்டில்

  தளபதி விஜய்க்கு சர்கார் டைட்டிலை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காப் ஸ்டோரிக்கு சம்பந்தமே இல்லாமல் தர்பார் என்கிற டைட்டில் வைத்திருப்பார். ஆனால், அது, ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கான டைட்டில் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

  English summary
  Several cinema scenes cultivate for Rajinikanth’s political entry over punch dialogues, songs and even titles also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X