twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அணில்' பிறந்த நாள் விழா... ஆப்பு வைத்த 'அரசியல்'!

    By Shankar
    |

    Vijay
    நடிகர்களும் அரசியலும் புலிவால் பிடித்த நாயர் மாதிரிதான். அவர்களும் விடமாட்டார்கள்... அதுவும் அவர்களை விடாது!

    நடிகர் விஜய் என்னதான் அமைதியின் உருவமாக, சாதுப் பிள்ளயாக நடந்து கொண்டாலும், அவருக்குள் இருக்கும் அரசியல் ஆசை என்னவென்பது ஆட்சியாளர்களுக்கு - அது எந்த கட்சியாக இருந்தாலும் - நன்றாகவே தெரியும்.

    திமுக மீதான கசப்பில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பிரச்சாரமே செய்தார். அவர் தந்தையும் களத்தில் இறங்கினார். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் அணில் மாதிரி உதவினேன் என்று அவர் அறிவிக்க, அடுத்த நிமிடமே ஆட்சி மேலிடம் 'அணில்' விஷயத்தில் கறார் பார்வையுடன் நடக்க ஆரம்பித்தது.

    அது இப்போது விஜய் பிறந்த நாள் விழாவில் கொஞ்சம் பெரிதாக எதிரொலித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

    அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பெரிதாக விழா, நிகழ்ச்சிகள் எதையும் நடத்தாமல்தான் இருந்தார் விஜய். அப்படியே நடந்தாலும் சத்தமில்லாமல் முடிந்துவிடும்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. கடலூரில் இலவசத் திருமணம் என்ற பெயரில் விஜய் மன்றத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டினர். அதில் விஜய்யே ஓட்டமெடுக்க வேண்டி வந்தது வேறு விஷயம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டம்தான் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

    அந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களிலேயே மீண்டும் ஒரு இலவச திருமண நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார் விஜய்யும் அவர் ரசிகர்களும். அதற்கும் பெரும் கூட்டம்.

    இந்த நிலையில் அவரது பிறந்த நாள் விழா வருகிறது. சாதாரண நாளிலேயே பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்டியவர்கள், பிறந்த நாள் விழா என்றால் அரசியல் மாநாடு ரேஞ்சுக்கு ஆட்களைத் திரட்டுவார்கள் என்பதை மேலிடம் கணித்திருந்தது. அதற்கேற்ப, கல்லூரி மைதானத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாடு எனும் அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.

    பிரமாண்ட பந்தல், 3900 பயனாளிகளுக்கு உதவி, மாவட்டந்தோறும் நடத்தப்போகும் இலவச திருமண அறிவிப்புகள் போன்றவற்றை உளவுத்துறை மூலம் அறிந்த பிறகே, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    'பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'அணிலை' பெரிதாக வளர்த்து, அதனிடமே ஆதரவு கேட்க வேண்டிய சூழல் வேண்டாமே என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்!' என்று கண்ணடிக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

    பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தேதிக்கு மாற்றிக் கொள்கிறோம் என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்டபோது, பின்னர் சொல்கிறோம் என்று மட்டும் பதிலளித்துள்ளனர் காவல் துறையினர். அனுமதி அளிப்பதும் மறுப்பதும் அவர்கள் கையிலா இருக்கிறது!

    யாரை எப்போது தட்ட வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்து வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்!

    English summary
    According to sources, there are some political reasons behind the cancellation of Vijay's birthday function that scheduled on June 8.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X