»   »  அரசியலில் ரஜினி வழிதான் என்வழியும்..!- ராதிகா

அரசியலில் ரஜினி வழிதான் என்வழியும்..!- ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரசியலில் ரஜினிகாந்த் வழிதான் என்னுடைய வழியும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

பழனியில் நடைபெற்று வரும் ஒரு படப்பிடிப்பில் நடிகை ராதிகா பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு இடைவேளையில் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

தரிசனம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "பழனி அருகே நடந்து வரும் படப்பிடிப்புக்காக வந்தேன். இப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன்.

Politics: Radhika follows Rajini

நான் தீவிர அரசியலுக்கு எப்போது வருவேன் என எனக்கு தெரியாது. இந்த கேள்வியைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் வழிதான் என்வழியும்.

நான் எப்படி வருவேன் எப்போது வருவேன் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவரான சரத்குமார்தான் முடிவு செய்வார். அதில் நான் தலையிடுவதில்லை," என்றார்.

English summary
Actress Radhika says that she follows Rajinikanth in taking political entry decision.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil