twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சயீரா நரசிம்ம ரெட்டி என் முதல் வரலாற்று திரைப்படம்- கிச்சா சுதீப்

    |

    சென்னை: நான் நடிக்கும் முதல் வரலாற்றுப் படம் சயீரா நரசிம்ம ரெட்டி என்று சுதீப் கூறியுள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஒருவர், அரசியலில் நுழைந்தால், அது 10 ஆண்டு சினிமா வாழ்க்கையையே மறக்கடிக்க செய்யும் என்பதை சிரஞ்சீவியைப் பார்த்து நான் கற்றுக்கொண்டேன். அவரைப் பார்த்த பிறகு, நான் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க கூடாது என்று முடிவெடுத்தேன் என்றும் நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

    கன்னட நட்சத்திரமான சுதீப் பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஈகா படம் மூலம் தெலுங்கில் பிரபலமானார். நான் ஈ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தனக்கென்று ஒரு இமேஜ் வைத்துக்கொள்ளாமல் கதாயாகனாகவும் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

    Politics will make you forget 10 years of cinema-Sudeep

    சமீபத்தில் இவர் நடித்த பயில்வான் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் சுதீப் விரைவில் வெளியாகவிருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி என்னும் வரலாற்று திரைப்படத்தில் தெலுங்க மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

    இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சுதீப் இப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, வழக்கமான இடைவெளிகளில் சினிமா எப்போதுமே ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது. சுரேந்தர் ரெட்டி சார் இயக்கத்தில் சிரஞ்சீவியுடன் சயீரா படத்தில் நடிக்கிறேன். நான் நடிக்கும் முதல் வரலாற்றுப் படம் இது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்தார்.

    Politics will make you forget 10 years of cinema-Sudeep

    தற்போது, சயீரா நரசிம்ம ரெட்டி படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய மறக்க முடியாத இனிய அனுபவங்களையும், மெகாஸ்டார் சிரஞ்சீவியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    நடிகர் சுதீப் இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஒருவர், அரசியலில் நுழைந்தால், அது 10 ஆண்டு சினிமா வாழ்க்கையையே மறக்கடிக்க செய்யும் என்பதை சிரஞ்சீவியைப் பார்த்து நான் கற்றுக்கொண்டேன். அவரைப் பார்த்த பிறகு, நான் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க கூடாது என்று முடிவெடுத்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

    வழக்கமாக நடிகர்களுக்கு அரசியல் ஆசை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சம்பந்தமாக பல பதில்களை கொடுப்பது வழக்கம். ஆனால் சுதீப்பின் பதில் கொஞ்சம் வித்தியாசமான பதிலாக உள்ளது.

    English summary
    I learned from Chiranjeevi that if anyone while busy in cinema, suddenly if enter politics. It will make you forget about 10 years of cinema. Actor Sudeep has said that after seeing him, I have learned that the political side is not to lie down.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X