twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொல்லாதவன் 15 ஆண்டுகள்... வெற்றிமாறனுக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்… அந்த பல்சர் பைக் கதை தெரியுமா?

    |

    சென்னை: வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான 'பொல்லாதவன்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    தனுஷின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பொல்லாதவன் 15 ஆண்டுகள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    பொல்லாதவன் 15 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் தனுஷ், வெற்றிமாறன், திவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

     வெற்றிமாறனை கண்டுபிடித்த தனுஷ்..பொல்லாதவன் 15 ஆண்டு..2 தேசிய விருதுகளை அள்ளிய கூட்டணி வெற்றிமாறனை கண்டுபிடித்த தனுஷ்..பொல்லாதவன் 15 ஆண்டு..2 தேசிய விருதுகளை அள்ளிய கூட்டணி

    தனுஷ் – வெற்றிமாறன் காம்போ

    தனுஷ் – வெற்றிமாறன் காம்போ

    மறைந்த பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அது ஒரு கனாக் காலம்' 2005ம் ஆண்டு வெளியானது. அப்போது பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட நட்பில் இருந்து தான், பொல்லாதவன் படம் உருவானது. 'அது ஒரு கனாக் காலம்' படப்பிடிப்பின் போதே தனுஷுக்கு கதை சொல்லிவிட்டார் வெற்றிமாறன். ஆனால், சரியான தயாரிப்பாளர் அமையாமல் ட்ராப் ஆகிக் கொண்டே போனது பொல்லாதவன். ஒருவழியாக குரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரிக்க 2007ம் ஆண்டு வெளியானது பொல்லாதவன்.

    நோ சொன்ன தயாரிப்பாளர்

    நோ சொன்ன தயாரிப்பாளர்

    வெற்றிமாறனுக்கு முதல் படம் என்பதோடு, தனுஷுக்கும் அந்த நேரம் வெளியான படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இதனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாம். பொல்லாதவன் கதையை முழுவதுமாக முடித்துவிட்ட வெற்றிமாறன், படப்பிடிப்புக்கு பல்சர் பைக் வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். அப்போது பல்சர் பைக்கின் விலையும் அதிகம், புக் செய்தாலும் உடனடியாக கிடைக்காத சூழல் இருந்தது. அதனால், பல்சர் பைக் வேண்டாம், அதற்குப் பதிலாக வேறு எதாவது பைக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வெற்றிமாறனிடம் தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம்.

    வெற்றிமாறனுக்கு கை கொடுத்த ஆர்த்தி

    வெற்றிமாறனுக்கு கை கொடுத்த ஆர்த்தி

    பொல்லாதவன் படப்பிடிப்பின் போது ஆர்த்தியை காதலித்து வந்தார் வெற்றிமாறன். இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டு இப்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தனிக் கதை. ஆனால், பொல்லாதவன் படத்திற்கு பல்சர் பைக் கிடையாது என தயாரிப்பாளர் மறுத்துவிட்டதை ஆர்த்தியிடம் கூறியுள்ளார் வெற்றிமாறன். பல்சர் பைக்தான் இந்தக் கதைக்கு சரியாக இருக்கும் எனவும் ஆர்த்தியிடம் கூறியுள்ளார். அதனால், ஆர்த்தியே தனது சொந்த செலவில் பல்சர் பைக் வாங்கி, அதை பொல்லாதவன் படத்துக்காக வெற்றிமாறனிடம் கொடுத்துள்ளார். அப்போது பல்சர் பைக்கிற்கு புக்கிங் அதிகமாக இருந்ததால் உடனடியாக கிடைக்காது என்ற நிலை இருந்தது. ஆனால், வெற்றிமாறனும் ஆர்த்தியும் பஜாஜ் ஷோரூமில் வேலைப் பார்த்த அவர்களின் நண்பர் ஒருவரின் உதவியுடன், உடனடியாக பல்சர் பைக்கை வாங்கியுள்ளனர்.

    பல்சருக்கு வந்த வாழ்வு

    பல்சருக்கு வந்த வாழ்வு

    பல்சர் பைக் கையில் கிடைத்ததும் உற்சாகமாக படப்பிடிப்பை தொடங்கிய வெற்றிமாறன், அதேவேகத்தில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துள்ளார். அதன்பிறகு பொல்லாதவன் வெளியானதும், அதை ரசிகர்கள் கொண்டாடியதும் எல்லோரும் அறிந்ததே. முக்கியமான அந்த பல்சர் 150சிசி பைக்குக்கு வந்த வாழ்வு பற்றி சொல்லவே வேண்டாம். தனது கதைக்கு எது தேவையோ அதில் விடாப்பிடியாக நின்று சாதித்த வெற்றிமாறனை அதன் பிறகு தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். அந்தளவிற்கு பல்சர் பைக்கை ஒரு பாத்திரமாகவே பொல்லாதவன் படத்தில் காட்டியிருப்பார் வெற்றிமாறன். அவரின் ஆசைக்கு சரியான நேரத்தில் உதவி செய்த வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தியும் பொல்லாதவன் வெற்றியில் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has been 15 years since the release of Vetrimaran's film Polladavan. The film crew including Dhanush and Vetimaaran celebrated this together. In this case, Vethimaran was adamant that he wanted a Pulsar bike for the film Polladavan and bought it himself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X