தனுஷின் பொல்லாதவன் இந்தி ரீமேக்.. "கன்ஸ் ஆப் பனாரஸ்".. 28ந் தேதி ரிலீஸ் !

Recommended Video

பொல்லாதவன் Remake Guns Of Banaras | Ganesh Venkatraman Exclusive Interview

சென்னை : தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.

வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி என்று தான் கூற வேண்டும். இவரும் தனுஷும் ஒரு படத்தில் இணைந்ததால் அது வெற்றி தான். இவர்கள் இருவரும் இணைந்து பல தேசிய விருதை தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்து உள்ளனர்.

Polladhavan to be remake in hindi

இவர்கள் இருவரும் இணைந்த முதல் திரைப்படம் தான் பொல்லாதவன். இப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கான நிலையில் இப்போது இந்தியில் ரீமேக் ஆகி உள்ளது.

ஆசையாக வாங்கிய பைக் ஒன்று தொலைந்து விடுகிறது, அது எங்கே சென்றது அது இல்லாமல் ஹீரோ படும்பாடு என்று எதார்த்தமான காட்சிகளுடன் எடுக்கப்பட்ட படம் தான் பொல்லாதவன். இப்படம் தனுஷ்க்கு தமிழில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

Polladhavan to be remake in hindi

இப்படம் இப்போது இந்தியில் "கன்ஸ் ஆப் பனாரஸ்" என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. கர்ணன் நாம், நடாலியா, அபிமன்யு சிங் நடிக்கின்றனர். தமிழ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சேகர் சூரி இயக்குகிறார்.

Polladhavan to be remake in hindi

இப்படம் அடுத்த வாரம் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தி திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் வெற்றி பெற்றதை போல இந்தியிலும் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது. கணேஷ் வெங்கட்ராமிற்கு இதற்கு அடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X