»   »  பொங்கல் 2017 ரேஸ்... விஜய்யோடு மல்லுக் கட்ட வரும் சூர்யா, எஸ்ஜே சூர்யா, ஜிவி பிரகாஷ்!

பொங்கல் 2017 ரேஸ்... விஜய்யோடு மல்லுக் கட்ட வரும் சூர்யா, எஸ்ஜே சூர்யா, ஜிவி பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கல் 2017 -க்கு விஜய்யின் 60வது படம் பைரவா மட்டும்தான் வெளியாகும் என்று பலரும் ஜோசியம் கூறி வந்தனர். ஆனால் அப்படியெல்லாம் விட்டுடுவோமா என இன்னும் நான்கு படங்கள் பொங்கல் ரேசில் சேர்ந்துள்ளன.

அவை சிங்கம் 3, நெஞ்சம் மறப்பதில்லை, புரூஸ் லீ மற்றும் சிரஞ்சீவியின் கைதி எண் 150.

பைரவா

பைரவா

விஜய்யின் 60வது படம். பரதன் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். வெளியாகும் தேதி ஜனவரி 12, 2017.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள படம். பொங்கல் விடுமுறை ஒரு வாரம் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ஹரி - சூர்யா காம்பினேஷனில் வரும் 5வது படம் சிங்கம் 3. ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போய், இறுதியாக ஜனவரி 12, 2017-ஐ குறிவைத்துள்ளது இந்த சிங்கம். பைரவாவுக்கு நிஜ போட்டி சிங்கம்தான்.

புரூஸ் லீ

புரூஸ் லீ

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீயும் பொங்கல் ரிலீஸ் உறுதி என அறிவித்துள்ளனர். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தை செல்வகுமார், ரவிச்சந்திரன், விட்டல்குமார் தயாரித்துள்ளனர்.

கைதி எண் 150

கைதி எண் 150

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ரீ என்ட்ரி படம் இது. கத்தி படத்தின் ரீமேக். தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் ஒரு நேரடிப் படம் போலவே வெளியாகவிருக்கிறது, பொங்கல் திருநாளில்.

English summary
Singam 3, Nenjam Marappathillai, Bruce Lee are joining with Bairava in Pongal race 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil