»   »  பொங்கல் ரேஸ்... பந்தயத்தில் 6 படங்கள்! #PongalReleases2018

பொங்கல் ரேஸ்... பந்தயத்தில் 6 படங்கள்! #PongalReleases2018

Posted By:
Subscribe to Oneindia Tamil
பொங்கலுக்கு கன்பார்ம் ஆன படங்கள் !!- வீடியோ

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு 6 புதிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. அவை பாஸ்கர் ஒரு ராஸ்கல், குலேபகாவலி, மதுரவீரன்,

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மற்றும் மன்னர் வகையறா.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான சீசன் பொங்கல் திருவிழா காலம். கிட்டத்தட்ட 5 நாட்கள் தினசரி 5 காட்சிகள் ஓட்டிக் கொள்ளலாம். இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்குகிறது பொங்கல் விடுமுறை. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை இந்த விடுமுறை தொடர்கிறது.

9 படங்கள்

9 படங்கள்


முதலில் பொங்கலுக்கு 9 படங்கள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அந்த பட்டியலில் இருந்து இரும்புத்திரை, கலகலப்பு - 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற படங்கள் வெளியேறி இப்போது வெளியேறிவிட்டன.

கன்ஃபர்ம்

கன்ஃபர்ம்

மீதமுள்ள ஆறு படங்களில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், குலேபகாவலி, மதுரவீரன் ஆகிய படங்கள் சென்சார் செய்யப்பட்டுவிட்டன.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மற்றும் மன்னர் வகையறா படங்கள் சென்சாருக்கு காத்திருக்கின்றன.

மன்னர் வகையறா

மன்னர் வகையறா

தானா சேர்ந்த கூட்டத்துக்கு முன்பாகவே பொங்கல் வெளியீடு என விளம்பரம் செய்யப்பட்ட படம் விமலின் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி நிச்சயம் ரிலீசாகும் என தயாரிப்பாளர் உறுதியாக அறிவித்துள்ளார்.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

விக்ரம் நடிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்கெட்ச் படம் கலைப்புலி தாணுவின் தயாரிப்பு. இந்தப் படமும் ஜனவரி 12-ம் தேதிதான் வெளியாவதில் மாற்றமில்லை என்கிறார் தயாரிப்பாளர்.

English summary
There are 6 new direct Tamil movies to hit the screens as Pongal special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X