»   »  பொங்கல் கவுன்ட் டவுன் ஆரம்பம்... நான்கு படங்கள் கன்ஃபர்ம்!

பொங்கல் கவுன்ட் டவுன் ஆரம்பம்... நான்கு படங்கள் கன்ஃபர்ம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரும்... அறிவித்த படங்களில் எவை பின்னிழுத்துக் கொள்ளும் என்ற சந்தேகமே இந்த ஆண்டு இல்லை.

நான்கு படங்களை பொங்கல் ஸ்பெஷலாக அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இந்த நான்குமே ஒவ்வொரு வகையில் ஸ்பெஷலானவை.


நான்குமே நிச்சயம் தை முதல் தேதி கண்டிப்பாக வெளியாகிவிடும் என்ற நிலையில் இருப்பவை.


1.தாரை தப்பட்டை

1.தாரை தப்பட்டை

இந்தப் பொங்கலுக்கு உறுதியாக தயாரான முதல் படம் தாரை தப்பட்டை. இளையராஜாவின் 1000 மாவது படம் என்ற ஸ்பெஷல் அந்தஸ்து வேறு. பாடல்கள் ஏற்கெனவே பெரும் பாராட்டுகளையும் வரவேற்பையும் குவித்து வரும் நிலையில், பாலாவின் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 250 அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


சசிகுமார்- வரலட்சுமி நடித்துள்ளனர்.2. ரஜினி முருகன்

2. ரஜினி முருகன்

கிட்டத்தட்ட ஒரு வருட தாமதத்துக்குப் பிறகு வெளியாகிறது சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம். பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படம் 300 அரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


3. கதகளி

3. கதகளி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்தப் படம், இந்த பொங்கலின் வெற்றிக் குதிரை என ரிலீசுக்கு முன்பே பேச்சு நிலவுகிறது. 250 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.


4. கெத்து

4. கெத்து

உதயநிதியின் நான்காவது படம் கெத்து. அவர் நடித்த கடைசி இரண்டு காமெடிப் படங்களும் சுமார் ரகம். எனவே இந்தப் படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். ரெட்ஜெயன்ட் தயாரித்து வெளியிடும் இந்தப் படத்துக்கு 200 அரங்குகள் வரை கிடைத்துள்ளன.
English summary
The Pongal Count down is starts with 4 new different movies, i.e, Tharai Thappattai, Kathakali, Rajinimurugan and Gethu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil