»   »  பொங்கல் படங்களின் ரன்னிங் டைம்.. ரஜினிமுருகன் நீளம் அதிகம்

பொங்கல் படங்களின் ரன்னிங் டைம்.. ரஜினிமுருகன் நீளம் அதிகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் கெத்து, தாரை தப்பட்டை, கதகளி மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்களின் ரன்னிங் டைம் தற்போது வெளியாகி இருக்கிறது.

போன ஆண்டு பொங்கல் தினத்தில் ஐ, ஆம்பள, டார்லிங் என்று 3 படங்கள் வெளியான நிலையில் இந்தப் பொங்கல் பண்டிகைக்கு இளம் நடிகர்களின் 4 படங்கள் வெளியாகின்றன.


இதில் ஒவ்வொரு படங்களின் ரன்னிங் டைம் எவ்வளவு, என்ன என்ற விவரங்களை இங்கே காணலாம்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரஜினிமுருகன். பலமுறை தள்ளிப் போன இப்படம் இந்த பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 38 நிமிடம். தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற ரஜினிமுருகனின் நீளம் மற்ற படங்களை ஒப்பிடும்போது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


கெத்து

கெத்து

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கெத்து. இந்தப் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம்
8 நிமிடங்கள். தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர்.


கதகளி

கதகளி

விஷால் - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கதகளி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 5 நிமிடங்கள். விஷாலின் பிலிம் பேக்டரியும், பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயரித்திருக்கும் இப்படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றிருக்கிறது.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

இளையராஜாவின் இசையில் உருவான 1௦௦௦ மாவது படம் என்ற பெருமையைப் பெற்ற தாரை தப்பட்டையை பாலா இயக்கி இருக்கிறார். சசிகுமார் - வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 5 நிமிடங்கள். பாலா சில காட்சிகளை நீக்க மறுத்ததால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.


இந்தப் படங்களில் ரஜினிமுருகன் மற்றும் தாரை தப்பட்டை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. எனினும் இப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
The following 4 Movies Sivakarthikeyan’s Rajini Murugan, Vishal’s Kathakali Udhayanidhi Stalin’s,Gethu and Bala’s Tharai Thappattai Released on Pongal Festival. Now the 4 Movies Running Time Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil