»   »  பொங்கல் 2016: அரண்மனை 2... இன்னும் ரெண்டு வாரம் தள்ளிப் போகுது?

பொங்கல் 2016: அரண்மனை 2... இன்னும் ரெண்டு வாரம் தள்ளிப் போகுது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாதாரண வெள்ளிக் கிழமைகளில் நான்கைந்து.. ஏன் எட்டுப் படங்கள் கூட சத்தமில்லாமல் வெளியாகின்றன. தியேட்டர் பிரச்சினைகள் எதுவும் கூட இருப்பதில்லை.

ஆனால் பண்டிகைக் காலங்களில் மட்டும் இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம் என்ற குடும்பக் கட்டுப்பாடு பாலிடி மாதிரியாகிவிட்டது நிலைமை.


இந்தப் பொங்கலுக்கு நான்கைந்து படங்கள் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சில படங்கள் வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள்.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

பொங்கல் தினத்தில் கண்டிப்பாக ரிலீசாகிவிடும் என்ற நிலையில் உள்ள படம் தாரை தப்பட்டை. இளையராஜாவின் ஆயிரமாவது படம். பாலவின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியாகிறது.
கதகளி

கதகளி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்தப் படமும் ஜனவரி 14-ம் தேதி கட்டாயம் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினி முருகன்

ரஜினி முருகன்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக இதோ அதோ என பல வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்ட ரஜினி முருகன், ஒருவழியாக இந்தப் பொங்கலுக்கு வருகிறது.
அரண்மனை 2 தள்ளிப் போனது...

அரண்மனை 2 தள்ளிப் போனது...

மேற்கண்ட படங்களுடன் சேர்ந்து பொங்கலுக்கு வெளியாகவிருந்த படம் அரண்மனை 2. சுந்தர் சி இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் இரண்டு வாரங்கள் தள்ளிப் போயுள்ளது.


கெத்து

கெத்து

உதயநிதி ஸ்டாலின் - எமி ஜாக்சன் நடித்துள்ள கெத்து படம் திடீரென இப்போது பொங்கல் ரேசில் குதித்துள்ளது. அரண்மனை 2 தள்ளிப் போனதால் இந்த திடீர் முடிவாம்.


நான்கும் வெளியாகுமா?

நான்கும் வெளியாகுமா?

இந்த நான்கு படங்களும்தான் இப்போதைக்கு பொங்கல் ரிலீசாக களத்தில் உள்ளன. அரண்மனை 2 மாதிரி வேறு ஏதாவது ஒரு படம் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


English summary
There are 4 movies, Thaarai Thappattai, Kathakali, Rajini Murugan and Getthu are confirmed for this Pongal 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil