குலேபகாவலி படத்தில் இதுக்கு தானா ஹன்ஷிகா நடித்தார்..!!
நடிப்பிலிருந்து விலகி, இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பிரபு தேவா. இப்போது மீண்டும் நடிப்பு ஆசையில், தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு முன் அவர் நடித்த களவாடிய பொழுதுகள் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றன. அந்தப் படம் வெளியான சூட்டோடு இப்போது குலேபகாவலி வெளியாகிறது.
பொங்கல் படங்களில் இந்தப் படத்துக்கும் நல்ல முக்கியத்துவம் கிடைத்துள்ளது. பிரபு தேவா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படத்தை கொடப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ளார். அறம் படத்தைத் தயாரித்த நிறுவனம் இது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.
கல்யாண் இயக்கியுள்ள இந்தப் படத்தை பிரபு தேவா ரொம்பவே நம்பியுள்ளார். தமிழில் தொன்னூறுகளில் தான் இருந்த இடத்தை மீண்டும் இந்தப் படம் பெற்றுத் தரும் என்பது அவர் நம்பிக்கை.
முழுக்க ஒரு பயணக் கதையாக குலேபகாவலி உருவாகியுள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.