twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்றரை மாதமிருக்கு... இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களே...!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஓபனிங் சீஸன் என்றால் அது பொங்கல்தான். ஆண்டின் முதல் மாதத்திலேயே சினிமா வர்த்தகத்தை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த சீஸன் அமைந்துவிடும்.

    ஒரு டஜன் படங்கள்...

    ஒரு டஜன் படங்கள்...

    கடந்த காலங்களில் பொங்கலுக்கு ஒரு டஜன் படங்கள் வெளியானதெல்லாம் நடந்திருக்கிறது. ரசிகர்கள் இரு வேளை உணவு, இரு வேளை சினிமா (சிலருக்கு மூன்று வேளையும்!) என்று கழியும் பொங்கல் விடுமுறைகள்.

    நான்கைந்துதான்...

    நான்கைந்துதான்...

    ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நான்கைந்து படங்கள் வந்தாலே பெரிய சாதனை. அதுவும் ரஜினி படம் வந்தால், வேறு எந்தப் படமும் வெளியாகாத நிலைதான் உள்ளது.

    இந்த ஆண்டும் நான்கைந்து படங்களுக்கு மேல் வெளியாகாது என்றுதான் தெரிகிறது.

    விளம்பரங்கள் ஆரம்பம்...

    விளம்பரங்கள் ஆரம்பம்...

    பொங்கலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

    என்னென்ன படங்கள்..?

    என்னென்ன படங்கள்..?

    கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விஷால் நடிக்கும் 'மதகஜராஜா', ஜெயம் ரவியின் 'ஆதிபகவன்', ராம் இயக்கி நடிக்கும் 'தங்க மீன்கள்' உள்ளிட்ட படங்களை இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தி வருகின்றனர்.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    கமல் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் 'விஸ்வரூபம்' படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என விளம்பரம் வந்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    English summary
    Kollywood has started its Pongal season business from today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X