சிவாஜியை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு
சென்னை: மறைந்த நடிகர் 'செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு
நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் வீட்டுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொண்டு செல்வது சிவாஜி கணேசனின் வழக்கமாக இருந்தது. தனது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் சென்று சீர்வரிசை அளித்து பெருமாள் முதலியாரிடம் சிவாஜி ஆசி பெற்று வருவார்.

சிவாஜி கணேசன் மறைவை தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் இவ்வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் பிரபு, அவருடைய மனைவி புனிதா மற்றும் மகன் விக்ரம் பிரபு ஆகியோருடன் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு சென்றனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர் களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.


Click it and Unblock the Notifications











