»   »  ஜன.30ல் பொங்கி எழு மனோகரா: அஜீத், சரத்குமாருடன் போட்டி போடும் இர்பான்

ஜன.30ல் பொங்கி எழு மனோகரா: அஜீத், சரத்குமாருடன் போட்டி போடும் இர்பான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத்திரை நடிகர் இர்பான் ஹீரோவாக நடித்துள்ள படம் பொங்கி எழு மனோகரா வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்ற இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘பொங்கி எழு மனோகரா'. சிவாஜி நடித்த ‘மனோகரா' படத்தின் மிக முக்கியமான வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டார் இயக்குநர்.

‘1995 காலகட்டத்தில் 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பங்கள் தான் ‘பொங்கி எழு மனோகரா' படத்தின் கதை'' என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் ரங்கசாமி. அந்த நிஜ மனிதன் வேறு யாருமல்ல; படத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி தானாம்.

ஹீரோ இர்பான்

ஹீரோ இர்பான்

இப்படத்தில் கதையின் நாயகனாக ‘சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த இர்ஃபான் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பட்டாளம், ரூ படங்களில் நடித்துள்ளார்.

இரண்டு நாயகிகள்

இரண்டு நாயகிகள்

கதாநாயகிகளாக புதுமுகங்கள் அருந்ததி நாயர், அர்ச்சனா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் சிங்கம் புலியும் நடித்துள்ளார்.

சத்தியமங்கலம் காட்டுக்குள்

சத்தியமங்கலம் காட்டுக்குள்

‘பேனியன்' என்ற பட நிறுவனம் சார்பில் பரந்தாமன் தயாரித்துள்ள இப்படம் சத்தியமங்கலம் சுற்றுப் பகுதிகளில் படமாகியுள்ளது.

இப்படத்திற்கு சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, கண்ணன் இசை அமைத்துள்ளார். ‘98 சதவிகிதம் காமெடி, 2 சதவிகிதம் சீரியஸ்' என்ற வகையில் இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

இப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பெரிய படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆனதால் ஜனவரி 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அஜீத், சரத்குமாருடன்

அஜீத், சரத்குமாருடன்

ஜனவரி 29ஆம் தேதி அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்' ஜனவரி 30 சண்டமாருதம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது பொங்கி எழு மனோகரா படமும் ஜனவரி 30 போட்டியில் களமிறங்கியுள்ளது.

English summary
Ponge Ezhu Manohara movie releasing on 30th January.
Please Wait while comments are loading...