பொன்னி நதி பாடலுக்காக பிருந்தா மாஸ்டர் பட்ட கஷ்டம் என்னன்னு தெரியுமா?: வீடியோவே ரிலீஸ் ஆகிடுச்சு
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் குறித்து பிருந்தா மாஸ்டர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சாதிக்க காத்திருக்கும் பொன்னியின் செல்வன்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர் முதல் கமல் வரை பலரும் முயற்சித்தனர். ஆனாலும், அது முடியாமல் போக, இப்போது மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. இந்தப் படம் கண்டிப்பாக இந்தியத் திரையுலகில் புதிய சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர்.

பொன்னியின் செல்வனுக்கு தோள்கொடுக்கும் ஏஆர் ரஹ்மான்
ரோஜா படத்தில் இருந்து தொடங்கிய மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து வெரைட்டியான பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை மயக்கி வருகின்றனர். அதேபோல், இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும், இந்தக் கூட்டணி மாஸ் காட்டவுள்ளது. ஏஆர் ரஹ்மானின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் பின்னணி இசையும் ரஹ்மானின் மேஜிக்கல் டச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான பொன்னி நதி பாடல்
'பொன்னியின் செல்வன்' அப்டேட்டுக்காக காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு முதல் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது பொன்னி நதி பாடல் தான். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து பாடியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்தப் பாடலின் முதல் தொகையறாவை பாடிய பம்பா பாக்யா சமீபத்தில் தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. லிரிக்கல் வீடியோவாக பொன்னி நதி பாடலில், பிருந்தா மாஸ்டர் கோரியோகிராபி செய்யும் காட்சிகளும் இருந்தன. இந்நிலையில், அந்தப் பாடல் உருவானது குறித்து சூப்பர் வீடியோவை பிருந்தா மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.

பொன்னி நதி பாடலுக்காக மணிரத்னத்துக்கு நன்றி
பிருந்தா மாஸ்டர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொன்னி நதி பாடலுக்காக க்ரீன் மேட் பின்னணியில் அவரது குழுவினர் ரிகர்சல் பார்க்கின்றனர். செம்ம அசத்தலான ஸ்டெப்களுடன் பிருந்தா மாஸ்டரின் குழுவினர் ரிகர்சல் செய்வது, பிரமிக்க வைக்கிறது. மேலும், "பொன்னி நதி பாடலை உருவாக்கிய ஒவ்வொரு தருணமும் ரொம்பவே என்ஜாய் செய்ததாகவும், இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்க வாய்ப்புக் கொடுத்த மணிரத்னத்துக்கு நன்றி" எனவும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











