தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பொன்னியின் செல்வன்… 4 படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…?

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வனுக்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பால் 4 படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், எம்ஜிஆர் முதல் கலம்ஹாசன் வரை பல ஜாம்பவான்களின் கனவுப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர். மேலும், ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் போன்ற பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதால், சினிமா ரசிகர்கள், இலக்கிய வாசகர்கள் என அனைவரும் பொன்னியின் செல்வனுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால், இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் வெளியாகி இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப் போகும் படங்கள்

தள்ளிப் போகும் படங்கள்

பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக காணப்படுகிறது. இதனால், இந்தவாரம் வெளியாக இருந்த 4 திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெற்றியால் இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர் ரிலீஸ் தேதி மாற்றம்

பார்டர் ரிலீஸ் தேதி மாற்றம்

அதேபோல், அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காசேதான் கடவுளடா, அரவிந்த் சாமி நடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளன. பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதனால் சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் மாற்றப்படுவது வேதனையானது என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X