Don't Miss!
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Sports
என்ன கொடும சார் இது.. சூர்யகுமாருக்கே தண்ணீர் காட்டிய சாண்ட்னர்.. அதுவும் பவர் ப்ளேவில் - ஆச்சரியம்!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ராஜமெளலியின் பாகுபலி 2 பார்முலாவை கையில் எடுத்த மணிரத்னம்... PS-2 ரிலீஸ் தேதி சீக்ரெட் தெரியுமா?
சென்னை:
மணிரத்னம்
இயக்கிய
பொன்னியின்
செல்வன்
திரைப்படம்
இரண்டு
பாகங்களாக
உருவானது.
இதில்
முதல்
பாகம்
இந்தாண்டு
செப்டம்பர்
30ம்
தேதி
உலகம்
முழுவதும்
திரையரங்குகளில்
வெளியானது.
இதனைத்
தொடர்ந்து
பொன்னியின்
செல்வன்
இரண்டாம்
பாகம்
அடுத்தாண்டு
ஏப்ரல்
28ம்
தேதி
ரிலீஸாகும்
என
படக்குழு
அறிவித்துள்ளது.
இந்நிலையில்,
இந்த
ரிலீஸ்
தேதியில்
மணிரத்னம்
எடுத்துள்ள
பாகுபலி
2
சீக்ரெட்
பார்முலா
பற்றி
நெட்டிசன்கள்
விவாதத்தை
தொடங்கியுள்ளனர்.
50
வயதில்
மணிரத்னம்
பட
நடிகை
கர்ப்பமா?
துணிவு
தயாரிப்பாளர்
வீட்டில்
வாரிசு
வரப்போகுதா?
உண்மை
என்ன?

பொன்னியின் செல்வன் முதல் பாகம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால், அது நடக்காமல் போல, இந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்தது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பால் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் முதல் பாகம்.

இரண்டாம் பாகம் ரிலீஸ் அப்டேட்
திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் ப்ரைமிலும் வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாகம். இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அடுத்தாண்டு கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சோழர்கள் திரும்பி வருகின்றனர் என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்ட டீசர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகுபாலி 2 ரிலீஸ் தேதியில்
இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், இன்னொரு விவாதமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ராஜமெளலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. அதில் இரண்டாம் பாகம் 2017 ஏப்ரல் 28ம் தேதி தான் ரிலீஸாகியிருந்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்குகளை முற்றுகையிட்ட ரசிகர்கள், படத்தை மிகப் பெரிய வெற்றியடையச் செய்தனர். அதேபோல் தான் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் ராஜராஜ சோழனாகிய ஜெயம் ரவி கடலில் மூழ்குவதைப் போல முடிந்துள்ளது.

கை கொடுக்குமா சென்டிமெண்ட்?
ராஜராஜ சோழனாகிய ஜெயம் ரவிக்கு என்ன ஆனது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்போது அதற்கு விடை சொல்வதற்கான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும், பாகுபலி 2வின் அதே ரிலீஸ் தேதியை டிக் செய்துள்ளது. இந்த இரண்டுமே வரலாற்றுப் பின்னணியில் ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், பாகுபலி 2வைப் போல, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றாலும், கலவையான விமர்சனங்களே பெற்றன. எனவே முதல் பாகத்தில் இருந்த குறைகள் பொன்னியின் செல்வன் 2ல் இருக்காது என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.